இந்தியன் 2 படத்தில் இணையும் பிரியா பவானி சங்கர்…!

 

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு ஆரம்பித்த வேகத்திலேயே சில நாட்களில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.. பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்குவதால், இடையிடையே இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.