ப்ரியா பவானி ஷங்கர் முதல் முறையாக விஷ்ணு விஷாலுடன் ஜோடி சேர்கிறார்….!

மேயாத மான் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ப்ரியா பவானி ஷங்கர்.அதையடுத்து கடைகுட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் அடுத்ததாக இயக்குநர் செல்வா அய்யாவு இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி