குருதி ஆட்டம் படத்தின் டப்பிங் முடித்த ஹீரோயின்.. கொரோனா ஊரடங்கிலும் ஜரூர் பணி..

--

நடிகை பிரியா பவானி சங்கர் சமீபமாக பரபரப்பாக பேசப்படுகிறார். மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி யாக நடித்த அவர் அடுத்து பொம்மை படத்திலும் அவருடன் ஜடி சேர்ந்தார். அப்போது அவரிடம் எஸ்.ஜே.சூர்யா காதலை சொன்னதாகவும் அதை பிரியா ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் இதை எஸ்.ஜே சூர்யா மறுத்தார் முட்டாள் தனமாக யாரோ இப்படி கிசுகிசு கிளப்பியி ருக்கிறார்கள் என்றார். இந்த கிசுகிசுக்கள் ஒய்வதற்கு முன்பே பிரியா பவானி தனது பாய்பிரண்ட் படத்தை நெட்டில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.


பிரியா பவானி தற்போது குருதி ஆட்டம் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷணில் கலந்துகொண்டு தனது கதாபாத்திரத்துக்கான டப்பிங் பேசி முடித்தார். ஊரடங்கு தொடர்ந்தாலும் அரசு விதித்த கட்டுபாடுகளுடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிக்கு அனுமதி அளித் தால் அப்பணிகள் ஜரூராக நடக்கின்றன.