புதிய சிக்கலில் சிக்கிய பிரியா பவானி சங்கர்…..!

‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான பிரியா பவானி சங்கர் இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தார் . தற்போது புது சிக்கலில் சிக்கியுள்ளார்.

விக்ரமின் 58 வது படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமான பிரியா பவானி சங்கர், தற்போது அப்படத்தி இருந்து விலகுவதாக படக்குழுவிடம் தெரிவித்திருக்கிறாராம்.

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் இருக்கும் பிரியா பவானி சங்கரா, ‘விக்ரம் 58’ படத்திற்கு சரியாக கால்ஷீட் ஒதுக்க முடியாமல் ‘விக்ரம் 58’ படத்தில் இருந்தே விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளார் .

இப்படி திடீரென்று அவர் விலகுவதால், அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ‘விக்ரம் 25’ படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் புகார் கொடுக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.

கார்ட்டூன் கேலரி