விஷாலுக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர்….!

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க முன்வந்துள்ளார். அவரிடம் விஷாலின் தேதிகள் இருந்ததால், கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் விஷால் என்ற கூட்டணியை பேசி முடிவு செய்தார். கொரோனா ஊரடங்கில் தொலைபேசி வாயிலாகவே கதையைச் சொல்லி நடிகர்கள் ஒப்பந்தம் தொடங்கி நடைபெற்றுள்ளது.

இந்தப் படத்தில் விஷாலுக்கு நாயகியாக ப்ரியா பவானி சங்கரிடம் பேசி முடிவு செய்துள்ளது படக்குழு. அவருக்கும் கதை பிடித்துவிடவே சம்மதம் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.