செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி படிப்படியாக சீரியல் நடிகையாகவும்,நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வளர்ந்தவர் ப்ரியா பவானி ஷங்கர்.

இவர் நடிப்பில் வெளியான மேயாத மான்,கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.

இந்நிலையில் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்ட ப்ரியா பவானி ஷங்கர்.மணமகன் தேவை என்று மாட்ரிமோனிக்கு எடுப்பது போல இருக்கிறது என்று ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இது வெறும் போட்டோஷூட் மட்டும் தான் என்பது அவரது கேப்ஷன்கள் மூலம் தெரிகிறது.என்றாலும் சிலர் ப்ரியாவிற்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வருகின்றனர்.இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.