‘லட்சுமி பாம்’ தொடர்ந்து தமிழில் தான் இயக்கவுள்ள படத்துக்குத் தயாராகி வரும் வேளையில், நாயகனாகவும் சில படங்களில் நடிக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ் .

அதனைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கும் த்ரில்லர் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கவுள்ளார். இதில் லாரன்ஸுக்கு நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.