4 வருஷம் பத்திரிக்கை துறைல இருந்திருக்கேன் என சவால்விடும் பிரியா பவானி சங்கர்….!

நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, “நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழிநடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன், எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக்கொண்டிருக்குறோம். வாழ்த்துகள்” என ட்வீட் செய்திருந்தார் பிரியா பவானி சங்கர்.

அதற்கு பயனர் ஒருவர், ‘மேடம் நீங்களும் திருட்டு திராவிட சொம்பு’ தானா எனக் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரியா, ”பெரிய CID.. ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் டைம்லைன்ல இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் பத்திரிக்கை துறைல இருந்திருக்கேன். என் வேலையே அதுதான். இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.