‘கண்ணசைவு புகழ்’  பிரியா வாரியார் நடிக்கும் ஸ்ரீதேவி பங்களா டீசர் வெளியீடு

‘கண்ணசைவு புகழ்’  பிரியா வாரியார் நடித்து வரும்  ஸ்ரீதேவி பங்களா படத்தின்  டீசரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ள பிரியா வாரியார்   ‘மாணிக்க மலராய பூவி…’ என்ற மலையாள  மெல்லிசை பாடலுக்கு கண்களை சிமிட்டி சைகை ஏற்படுத்திய காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரியா வாரியார் புகழின் உச்சிக்கு சென்றார்.

அவரை வைத்து மறைந்த  ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு குறித்து ஸ்ரீதேவி பங்களா என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டு வருகிறது,. இந்த படத்தில் ஸ்ரீதேவியின் வேடத்தில் நடிப்பவர் பிரியா பிரகாஷ் வாரியார்.

இந்த படத்தின் 2 நிமிட டீசர் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு துபாய் ஓட்டலின் குளியலறை நீர்த்தொட்டியில் மூழ்கி ஸ்ரீதேவி மரணம் அடைந்ததாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த காட்சியை சித்தரிக்கும் வகையில் குளியல் தொட்டியில் கால் மட்டுமே தெரியும் வகையில் படமாக்கப்பட்ட காட்சி ‘ஸ்ரீதேவி பங்களா’ டீசரில் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

இதில் செலிபிரிடீயாக வளம் வரும் பிரியா மது அருந்துவது, புகை பிடிப்பது, போன்ற காட்சிகளும் வருகிறது.  இறுதியில் டைட்டில் வரும்போது ஸ்ரீதேவியின் மர்ம மரணத்தை குறிக்கும் வகையில் குளியல் தொட்டியில் இரண்டு கால்கள் மட்டும் காட்டப்பட்டவாறு டீஸர் முடிக்கப்படுகிறது.

இந்த டீஸர் தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.