‘மைதான்’ இந்தி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு பதில் ப்ரியாமணி…!

தமிழ் உட்பட பல மொழிகளில் தரமான ரோல்களை தேர்வு செய்து நடிப்பவர் கீர்த்தி சுரேஷ் .

போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடித்து வரும் மைதான் இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன கையோடு கீர்த்தி சுரேஷ் தன் உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும் தோலுமானார். பாலிவுட்டில் எலும்பும் தோலுமாய் உள்ள நாயகிக்கு தான் வாய்ப்பு அதிகம் என்ற எண்ணத்தில் இதை செய்துள்ளார் .

ஆனால் மைதான் படத்தில் கீர்த்தி அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடிக்க வேண்டுமாம். அவர் பூசினாற் போன்று இருந்ததால் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று நினைத்துள்ளனர். இதனால் கீர்த்தி சுரேஷுக்கு பதில் ப்ரியாமணி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .