டில்லி

மெரிக்காவில் வாஷிங்டனில் நடைபெற்றுள்ள கலவரம் குறித்து காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 நேற்று ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகள் வெளியானதை ஒட்டி டிரம்ப் தோல்வி முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதையொட்டி அவர் சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் வாஷிங்டன் நகரை முற்றுகை இட்டு செனட்  சபை கட்டிடத்தைத் தாக்கி உள்ளனர்.   இதில் ஒரு பெண் உயிர் இழந்துள்ளார்.  பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.

 

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  உலகில் பல நாடுகளிலும் இந்த கலவரத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.   காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி இந்த நிகழ்வுக்கு கடும்கனடனம் தெரிவித்துள்ளார்.

 

பிரியங்கா காந்தி, “தேர்தலில் தோல்வி அடைந்த ஒருவரது வலது சாரி ஆதரவாளர்களால் உலகின் மிகப் பெரிய ஜனநாயகமான அமெரிக்க ஜனநாயகம் குழப்பம் அடைந்துள்ளது.

 

ஆதாரமற்ற கொள்கைகள் மூலம் தங்களது அல்லது தங்கள் கட்சியினரின் தவறான செயல்களைச் சரி எனச் சொல்பவரின் ஆதரவாளர்களால் இந்த நிகழ்வு எந்த நாட்டிலும் நடக்கலாம்.  நாம் இந்த நிகழ்வுகளை உற்று நோக்கி நாம் இது போன்ற அறிவிலி கூட்டத்தில் ஒருவராகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது” எனப் பதிந்துள்ளார்.