டில்லி:

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு வாக்கு சேகரிக்கும் வகையில், அவரது சகோதரியும், உ.பி.மாநில கிழக்குப்பகுதிபொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி நாளை கேரளா வருகிறார். அங்கு 2 நாட்கள் முகாமிடும் அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

பிரியங்காவின் அரசியல் பிரவேசம் பாஜகவினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.யில் பிரியங்கா வின் அதிரடி அரசியல்  நடவடிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக மோடியை எதிர்த்து போட்டியிட சொல்லி அங்குள்ள மக்கள் அவரை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரியங்கா நாளை கேரளா வருகிறார்.

வயநாடு தொகுதியில் ஏற்கனவே தனது சகோதரனுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த பிரியங்கா தனது சகோதரை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.. அவரை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கேரள மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில்,வயநாடு தொகுதியில், வரும் 21ந்தேதியுடன் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. வருகிற 23-ந்தேதி வாக்குப்பதிவு  நடைபெற உள்ளது.

தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ராகுலுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரியங்கா களமிறங்குகிறார்.

இன்று உத்தரபிரதேச மாநிலத்துக்கு சென்றுள்ள பிரியங்கா, அங்கு மே 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள அமேதி தொகுதியில் ராகுலை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.பிற்பகல்   கான்பூரில் பிரமாண்ட ரோடு ஷோ மற்றும்,   பூல்பக் நகரில் நடைபெற உள்ள  பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசுகிறார்.

அதைடுத்து உடனே டில்லி திரும்பும் பிரியங்கா நாளை காளை கேரளா பயணமாகிறார். நாளை மட்டும் 2 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பிரியங்கா இரவு அங்கே தங்கி நாளை மறுதினமும் ஓட்டு வேட்டையாடுகிறார்.

விவசாயிகள் அதிகமுள்ள வயநாடு தொகுதி விவசாயிகளிடமும் கலந்துரையாடல் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.