பிரியங்கா சோப்ராவிற்கு நேரில் திருமண வாழ்த்து சொன்னார் பிரதமர் மோடி!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அமெரிக்க பாப் படகர் நிக் ஜோன்ஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மணமக்களுடன் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

priyanka

தமிழ் திரையுலகில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானவர் தான் பிரியங்கா சோப்ரா. அந்த திரைப்படத்துடன் கோலிவுட்டை விட்டு பாலிவுட்டிற்கு பிர்யங்கா சென்றார். பாலிவுட் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் ஹாலிவுட்டில் ஒரு தொடரிலும் நடித்து உலக அளவில் பிரபலமானார்.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் நிக் ஜோன்ஸூடன் பிரியங்கா சோப்ராவிற்கு காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் நகரில் பிரமாண்ட திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக அங்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்.

நூற்றுக்கணக்கான பாலிவுட், ஹாலிவுட் நட்சத்திரங்கள் அலங்கரித்த பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் ஜோடியின் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மணமக்கள் வாழ்த்தினார். அதன்பின்னர் இரு குடும்பத்தாரிடமும் பிரதமர் மோடி உரையாற்றினார். வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களுடன் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக பிரியங்கா சோப்ராவிற்கும், நிக் ஜோன்ஸுக்கும் கிறிஸ்துவ முறைப்படியும், இந்து முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.

கார்ட்டூன் கேலரி