திருமணத்திற்கு முன்னரே புகைப்பட ஆல்பத்தை ரூ.18 கோடிக்கு விற்ற பிரியங்கா சோப்ரா!

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும், நிக் ஜோனாஸ் ஆகியோருக்கு டிசம்பர் 2ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. இந்நிலையில் இவர்களின் திருமண புகைப்படங்களை பிரபல நிறுவனத்திற்கு $ 2.5 மில்லியன் டாலருக்கு விற்று விட்டதாக தகவல்கள் வந்துள்ளது.

priyankanick

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா (35). பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக பிரியங்கா சோப்ரா வலம்வருகிறார். இவர் பாலிவுட்டைத் தொடர்ந்து கோலிவுட், ஹாலிவுட் என்று அசத்தியுள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவில் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் போது, அங்கு பாப் பாடகராக இருக்கும் நிக் ஜோனசை (25) காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஜோடியாக சென்று வருகின்றனர். அண்மையில் கூட, பிரியங்கா சோப்ரா தனது காதலரான நிக் ஜோனஸை மும்பைக்கு அழைத்து வந்து தனது குடும்பத்தாரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

priyanka

இந்நிலையில் இவர்களின் திருமணம் டிசம்பர் 2ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பின் பிரியங்கா அமெரிக்காவில் செட்டிலாகப் போகிறார். இதற்காக அங்குள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ஆடம்பர வீடு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளனர்.

இதற்காக திருமணத்தை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பதிவு செய்யும் முயற்சியில் காதல் ஜோடிகள் ஈடுபட்டு உள்ளனர். பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் திருமண உரிமை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க உள்ளனர்.

இவர்களின் திருமண ஆல்பம் பிரபல நிறுவனம் $ 2.5 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 18 கோடிக்கு பிரியங்கா சோப்ரா விற்பனை செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனம் தான் அவர்களின் திருமணம் முடிந்த பின் புகைப்படங்களை செய்தி நிறுவனங்களுக்கும், சமூக வலைத்தளங்களுக்கும் பரப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.