வயது குறைந்தவரை மணக்கும் இந்திய உலக அழகி ?

மும்பை

லக அழகியும் பிரபல நடிகையுமான பிரியங்கா சோப்ரா தன்னை விட 11 வயது குறைவானவரை மணக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது 36 வயதாகும் பிரியங்கா சோப்ரா கடந்த 2000 ஆம் வருடம் உலக அழகி பட்டம் பெற்றவர்.   அதன் பிறகு பல படங்களில் நடித்து வருகிறார்.   இவர் தமிழ்ப்படமான தமிழன் என்னும் படத்தில் விஜய் உடன் நடித்துள்ளார்.    இவர் மாடல், நடிகை, பாடகி, தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் உள்ளிட்ட பன்முகங்களை கொண்டவர்.

பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக்கி ஜோனசுடன் நெருங்கி பழகி வருகிறார்.    இவர் பிரியங்காவை விட 11 வயது இளையவர் ஆவார்.    இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக வட இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.  அதே நேரத்தில் அது தவறு என வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இவர்கள் இருவருடைய திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.    இருவருக்கும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைக்க உள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பிரியங்கா சோப்ராவுக்கும் நிக்கிக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக டிவிட்டரில் புகைப்படம் வெளியாகி உள்ளது.