Random image

“10 வயது இளையவரை திருமணம் செய்து கொண்டதால், குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை இல்லை” மனம் திறந்த பிரியங்கா சோப்ரா

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு 38 வயது ஆகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு வயது- 28. கணவரை விட பிரியங்கா சோப்ரா, 10 வயது மூத்தவர்.

“இந்த வயது வித்தியாசம் உங்கள் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினையை உருவாக்கியுள்ளதா?” என்று அண்மையில் நிருபர் ஒருவர் பிரியங்கா சோப்ராவிடம் கேள்வி எழுப்பினார்.

“எந்த பிரச்சினையும் இல்லை” என்று பதில் அளித்த பிரியங்கா, “இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் எங்கள் குடும்ப வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் தடையாக இல்லை” என்று தெளிவாக கூறினார்.

“எப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு அமைய வேண்டும் என நினைத்தேனோ, அந்த வாழ்க்கை எனக்கு கிடைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ள பிரியங்கா சோப்ரா “தம்பதியர், தங்கள் விருப்பங்கள் மற்றும் பழக்கங்களை ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டால் வாழ்க்கையில் பிரச்சினையே இருக்காது” என்று தெரிவித்தார்.

– பா. பாரதி