அமேசான் நிறுவனத்துடன் 2 வருட ஒப்பந்தம் செய்துள்ள பிரியங்கா சோப்ரா….!

பல மில்லியன் டாலர் மதிப்புடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான இரண்டு வருட ஒப்பந்தத்தை நடிகை பிரியங்கா சோப்ரா, அமேசான் நிறுவனத்துடன் போட்டுள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில்

“இந்தச் செய்தியை உங்களிடம் பகிர்வதில் மிகுந்த உற்சாகமும், பெருமையும் அடைகிறேன். எதிர்நோக்கியுள்ளேன். கைவசம் நிறைய வேலைகள் இருக்கிறது. அற்புதமான பார்ட்னர்களாக இருக்கும் ஜெனிஃபார் சால்கே உள்ளிட்ட அமேசான் அணியினருக்குப் பெரிய நன்றி. திறமையும், நல்ல படைப்பும் எந்த எல்லைக்கும் உட்படாதவை என்ற எனது நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.