நிரவ் மோடி விளம்பரத்தை ரத்துசெய்த பிரபல பாலிவுட் நடிகை !

மும்பை

நிரவ் மோடியின் நிறுவன விளம்பர ஒப்பந்தத்தை பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ரத்து செய்துள்ளார்.

முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா தற்போதைய பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவர் ஆவார்.   இவர் ஒரே ஒரு தமிழ்ப்படத்தில் நடித்துள்ளார்.    இவர் பல விளம்பர நிறுவனங்களுக்கு மாடலிங் செய்து வருகிறார்.    பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் முறைகேட்டில் சிக்கி குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றவர் நிரவ் மோடி.    இவருடைய நகை நிறுவனங்களில் விளம்பர தூதராக பிரியங்கா சோப்ரா இருந்து வருகிறார்.

தற்போது நிரவ் மோடியின் நிறுவனத்துக்கும் தனக்குமான விளம்பர தூதருக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக நடிகை பிரியங்கா சோப்ரா அறிவித்துள்ளார்.    இதனால் அவரது புகைப்படங்கள் மற்றும் அந்த நிறுவனத்துக்காக பிரியங்கா சோப்ரா நடித்த விளம்பரப்படங்கள் ஆகியவைகளை நிரவ் மோடியின் நிறுவனம் உபயோகப்படுத்த முடியாது.

இதே நிறுவனத்தின் மற்றொரு விளம்பர தூதரன பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுடனான் ஒப்பந்தம் ஏற்கனவே முடிவடைந்ததால்  அவரது புகைப்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களையும் உபயோகப்படுத்த முடியாது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Priyanka chopra terminated Nirav Modi agreement
-=-