பிரேக் அப் ஆன பிரியங்கா சோப்ரா தம்பி சித்தார்த் சோப்ரா – இஷிதா காதல்…!

பிரியங்கா சோப்ரா திருமணமே அனைவரையும் பேசவைத்த விஷயம் . தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸை கடந்த ஆண்டு திருமணம் முடித்தார். இன்னும் அதன் தாக்கமே மக்களிடம் குறையவில்லை .
இந்நிலையில் அவரது தம்பி சித்தார்த் சோப்ரா – இஷிதா திருமணம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் இருவருக்கும் பிரேக் அப் ஆகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சித்தார்த்துக்கும் அவரின் நீண்ட நாள் காதலி இஷிதா குமாருக்கும் இடையே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது

மணமகள் இஷிதாவுக்கு எமர்ஜென்ஸியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால் திருமணத்தை இரு வீட்டாரும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

இந்நிலையில் இஷிதா குமார் சிகிச்சை முடிந்து நலம் பெற்று வரும் நிலையில் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றைத் வெளியிட்டுள்ளார் அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு அவரது பெற்றோர் கமெண்ட் செய்துள்ளனர். அதில், ‘பழைய புத்தகத்தை மூடு மற்றும் புதிய கதையை எழுது, ​​நாங்கள் உன்னோடு இருக்கிறோம், பிரபஞ்சத்தின் விரிவடைதலை உணர்ந்து கொள்’ என்று பதிவிட்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Break up, Ishita Kumar, Priyanka Chopra, Siddharth Chopra
-=-