அஸ்ஸாமில் டீ எஸ்டேட் தொழிலாளர்களுடன் நடனம் ஆடிய பிரியங்கா காந்தி – வீடியோ

அஸ்ஸாம்: அஸ்ஸாம் மாநித்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காக ந்தி, அங்குள்ளற  டி எஸ்டேட் தொழிலாளர்களுடன் நடனம் ஆடினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அசாமில் மொத்தமுள்ள  126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கு மார்ச் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கி உள்ளன. தேர்தலை முன்னிட்டு, அங்கு விறுவிறுப்பான தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, 2 நாள் தேர்தல் பிரசார பயணமாக அங்குள்ள சென்றுள்ள   பிரியங்கா காந்தி,  அங்குள்ள பிரசித்தி பெற்ற  காமக்யா கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.  அசாமின் லக்கிம்பூரில் உள்ள தேயிலை பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமிகளுடன் பாரம்பரிய ‘ஜுமூர்’ நடனத்திலும் அவர் பங்கேற்றார்.

Video Courtesy: ANI