பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அனுமதி : டெங்கு காய்ச்சல்

டில்லி

பிரியங்கா காந்தி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் டில்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 23ஆம் தேதி மாலை விடாத காய்ச்சல் காரணமாக டில்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பிரியங்கா காந்தி அனுமதிக்கப்பட்டார்.   அங்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் வந்திருப்பது கண்டறியப்பட்டது.  தற்போது சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.   அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

டில்லியில் தற்போது பரவலாக டெங்கு காய்ச்சல் உள்ளது.   இதுவரை 325 பேர் டெங்கு பாதித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   தெற்கு டில்லியில் சுமார் 60 பேரும் புது டில்லியில் சுமார் 45 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.