லக்னோவில் உற்சாக வரவேற்பு: மக்கள் வெள்ளத்தில் நீந்தி வரும் பிரியங்கா! ராகுலுடன் பிரமாண்ட பேரணியில் பங்கேற்பு

 

டில்லி:

காங்கிரஸ் பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிரியங்கா காந்தி, அரசியலுக்குள் நுழைந்த பிறகு  இன்று முதன்முறையாக தனது சகோதரனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தியுடன் உ.பி. தலைநகர் லக்னோ வந்துள்ளார். அங்கு நடைபெறும் பிரமாண்ட பேரணியில் கலந்துகொண்டு மக்களின் ஆதரவை கோருகிறார்.

உ.பி. வருகை தந்துள்ள பிரியங்கா காந்திக்கு விமான நிலையம் முதல் அவர் செல்லும் வழி யெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும் பொதுமக்களும் லட்சக்கணக்கில் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்கள் வெள்ளத்தில் அவர் தனது சகோதரர் ராகுல்காந்தியுடன் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தபடி பிரியங்கா காந்தி வருகை தந்தார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, உ.பி. மாநிலத்தில் பாஜக மற்றும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணிகளின் அரசியலை எதிர்கொள்ளும் வகையில் பிரியங்கா காந்தியை ராகுல் காந்தி களமிறக்கி உள்ளார். பிரியங்காவுக்கு உ.பி. மாநிலம் கிழக்கு பகுதி பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதையடுத்து, காங்கிரஸ் தலைமையகத்தில் பொறுப்பேற்ற பிரியங்கா, தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் உ.பி. மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் இன்று தனது முதல் பயணமாக பிரியங்கா, ராகுல்காந்தியுடன் உ.பி. மாநிலம் வந்துள்ளார். அங்கு பிற்பகல் நடைபெறும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அவருடன் ராகுல்காந்தி மற்றும் உ.பி. மாநில மேற்கு பகுதி பொதுச்செயலாளர் சஞ்சின் பைலட் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

பிரியங்கா காந்தியின் வருகை உ.பி. மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள் ளது.  இன்று காலை லக்னோ விமான நிலையம் வந்த பிரியங்காவிற்கு காங்கிரஸ் விமான நிலையத்திலேயே  அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவர் உத்தர பிரதேச காங்கிரஸ் அலுவலகம் செல்லும் வழியில் பெரிய பேரணி போல நடத்தி அவரை காங்கிரஸ் கட்சி வரவேற்றது.

அந்த வழியில் 28 இடங்களில் சிறிய சிறிய மேடைகள் அமைக்கப்பட்டு பிரியங்காவை பற்றி புகழ்ந்து கொண்டு இருந்தனர். மரியாதை செலுத்தினார் பிரியங்கா காந்தியுடன், ராகுல் காந்தியுமும், காங்கிரசின் இன்னொரு உத்தர பிரதேச மாநில பொறுப்பாளரான ஜோதி ராதித்ய சிந்தியாவும் வந்தனர்.  லட்சக்கணக்கான  மக்கள் வெள்ளத்தில்  நீந்தி வந்த காட்சி பாஜக தலைவர்களின் வயிற்றில் புளியை கரைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவர்கள் எல்லோரும் சேர்ந்து இன்று மாலை  லக்னோவில் உள்ள லால்பாக் சந்திப்பில் மக்களை சந்தித்து பேச இருக்கிறார்கள்.  

உ.பி. மாநில காங்கிரஸ் தொண்டர்கள் பிரியங்காவை  துர்கையாக பாவித்து  போஸ்டர்கள் ஒட்டி வரவேற்பு தெரிவித்து உள்ளனர். லக்னோ முழுவதும் காங்கிரஸ் கொடிகளால் அலங்கரிக்கப் பட்டு உள்ளது.

தனது  உ.பி. பயணம் குறித்து தெரிவித்த,  பிரியங்கா காந்தி, “நான் நாளை லக்னோ வருகிறேன். ஒரு புதிய அரசியலை நாம் உருவாக்குவோம். அதில் நீங்கள் எல்லோரும் பங்களிப்பீர்கள் என நம்புகிறேன். இளைஞர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்டவர்களின் குரல் இந்த புதிய அரசியலில் எதிரொலிக்கும். புதிய எதிர்காலத்தை உருவாக்குவோம்” என் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், பிரியங்காவின் பொதுக்கூட்டத்தை காண லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு உள்ளனர்.  இன்று முதல் 14-ம் தேதி வரை உ.பி.யில் முகாமிடும் பிரியங்கா  பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.