டில்லி

த்திய அரசுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மூலம் கிடைத்த வருமானம் எங்கே எனக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கேட்டுள்ளார்.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.    ஆனால் கச்சா எண்ணெய் விலை உயரும் போது அதிகரிக்கப்படும் விலை மீண்டும் கச்சா எண்ணெய் விலை குறையும் போது குறைக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு நிலவுகிறது.

இந்த ஆண்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கச்சா எண்ணெய் விலை நெகட்டிவில் சென்றது.   ஆயினும் அப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை.   தற்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை ஏறும் போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அதிகரித்துள்ளது.  இது மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டரில்,”மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு உற்பத்தி வரியை உயர்த்தியதால் பெட்ரோல் மற்ரும் டீசல் விலை விண்ணை எட்டி உள்ளது.   இந்த விலை உயர்வின் மூலம் மத்திய அரசுக்குக் கூடுதல் வருவாய் ரூ.3 லட்சம் கோடி கிடைத்துள்ளது.  அந்த பணம் எங்கே சென்றது?

இந்த ரூ.3 லட்சம் கோடி பணம் எங்கே என விளக்கம் அளியுங்கள்.  

மக்கள் நிவாரணத்துக்குப் பணம் செலவழிக்காத மத்திய அரசு நாடாளுமன்ற கட்டிடம் கட்ட ரூ.20000 கோடி, பிரதமர் மோடிக்கு புதிய விமானம் வாங்க ரூ.16000 கோடி, விளம்பரச் செலவுக்கு நாள் தோறும் ரூ.2 கோடி எனச் செலவழிக்கிறது” எனப் பதிந்துள்ளார்.