தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளம் ராமர்கோவில் விழா… பிரியங்கா காந்தி

டெல்லி:

யோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் பணி நாளை நடைபெற உள்ள நிலையில், தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்தின் அடையாளம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி தெரிவித்து உள்ளார்.

ராமர்கோவில் பூமி பூஜை விழாவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், பிரியங்கா காந்தியின் டிவிட் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில்  நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி,  ராம ஜன்ம பூமியில் நாளை நடைபெறும் விழா “தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சாரத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறும் என்று நம்பிக்கை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

மேலும்,  “எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை ராமர் என்ற பெயரின் சாராம்சமாகும். ராமர் எல்லோரிடமும் இருக்கிறார்.”

“ராமர் மற்றும் சீதையின் அருளால், ராம்லாலா(குழந்தை ராமர்) கோவிலின் பூமி பூஜை விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.