யோகிக்கு நன்றி தெரிவித்த பிரியங்கா காந்தி

 

டில்லி

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேச கிழக்கு பகுதிகளுக்கு பொறுப்பு ஏற்றிருந்தார்.  அதையொட்டி அவர் பல தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.  அப்போது உத்திரப் பிரதேச அரசு அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளித்தது.  அவருடன் 22 பாதுகாப்பு வாகனங்கள் சென்றன.

நேற்று பிரியங்கா கந்தி உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எழுதிய கடிதத்தில், “எனது உத்திரப் பிரதேச பயணத்தின் போது எனக்கு காவல்துறையினர் அளித்த பாதுகாப்பு ஏற்பாட்டுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.   ஆனால் இந்த ஏற்பாடுகள் மக்களுக்கு மிகவும் அசவுகரியத்தை உண்டாக்குவதால் நான் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன்.

நான் மக்கள் சேவையில் இருப்பதால் என்னால் அவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் வரக்கூடாது.   எனது பாதுகாப்புக்காக என்னுடன் பல வாகனங்கள் வந்துள்ளன.   வழக்கமாக டில்லி உள்ளிட்ட பகுதிகளில் என்னுடன் ஒரு பாதுகாப்பு வாகனம் மட்டுமே வரும்.   இனி நான் உத்திரப் பிரதேசம் வரும்போதும் ஒரே வாகன பாதுகாப்பு அளிப்பது போதுமானது” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி