மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்….. காங். பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி வேண்டுகோள்… வீடியோ

டெல்லி :

நாடெங்கிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பாடகி கனிகா கபூர் மற்றும் அவரால் பாதிப்படைந்ததாக நம்பப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிமை படுத்தப்பட்டிருக்க, இந்த நிகழ்வு இன்று நாடு முழுவதும், குறிப்பாக உத்தர பிரதேஷ் மாநிலம் லக்னோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்.

மக்கள் யாரும் கொரோனா வைரஸ் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம், என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார், அனைவரையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் அதே சமயம் ஒருவருக்கொருவர் போதிய இடைவெளியுடன் இருக்கவும் வலியுறுத்தினார்.

அவரின், இந்த வேண்டுகோள் சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அவரின் விழிப்புணர்வு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.