லக்னோ:

நான் கோவிலுக்கு போகமாட்டேன் என்பது உங்களுக்கு தெரியுமோ? உ.பி. பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

உ.பி.யில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, தனது சகோதரர் ராகுல்காந்தி மற்றும் தாயார் சோனியா காந்திக்காக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

அப்போது, லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றால் கண்டிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமராக பதவி ஏற்பார் என்று உறுதிபட தெரிவித்தார்.

தொடர்ந்து வரும் 29ந்தேதி பிரியங்கா அயோத்தி செல்வதாகவும், அங்குள்ள பிரபல அனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியானது. அந்த பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய உள்ளார்.

பிரியங்காவின் அயோத்தி பயணத்தை பாஜவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். உ.பி. பாஜக மாநில அமைச்சரான மோஷின் ராசா பிரியங்காவை தாக்கி அறிக்கை விடுத்துள்ளார். அதில் அயோத்தில்  ‘ராமர் இருக்கிறாரா என்று  கேள்வி எழுப்புபவர்கள் அயோத்திக்கு சென்று என்ன செய்யப் போகிறார்கள்? பாபரின் நினைவாக அங்கு  ஏதும் மீதம் எதுவும் உள்ளதா எனும் தேடச் செல்கிறாரோ என்று கூறியிருந்தார்.

உ.பி. முதல்வர் யோகியும், ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு தேர்தல் சமயத்தில் மட்டும்தான் கோவில்கள் ஞாபகம் வரும் என்று பேசியிருந்தார்.

அதுபோல மத்திய அமைச்சர் ஸ்மிருதி  இராணியும் விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள பிரியங்கா காந்தி, நான் எங்கே போகிறேன் என்பது அவர்களுக்கு எப்படி தெரியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனார்., தேர்தல் இல்லாத சமயத்தில் நான் கோவிலுக்கு போக மாட்டேன் என்பது உங்களுக்கு தெரியுமா?  என்றும் பாஜகவினருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.