யூ-ட்யூபில் ட்ரெண்டாகும் விஜய் டிவி பிரியங்கா வீடியோ….!

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராக வலம் வருபவர் வி.ஜே.பிரியங்கா.

டிவி மட்டுமல்லாமல் தனக்கென யூ-ட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதனை தற்போது வரை 1.16 மில்லியன் பார்வையாளர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ‘என்ன கருமத்த சாப்பிட்டேனு தெரியல. பேதி ரெண்டு மூனு தரவ இல்ல, 15 தடவைக்கு மேல போய்ட்டு இருக்கு. ஆஸ்பத்திரில ஊசி, குளுக்கோஸ்னு அடிச்சு நவத்தீட்டு இருக்காங்க. எவ்வளவு ஊசிப் போட்ருக்காங்கனு நீங்களே பாருங்கனு’ கூறியுள்ளார்.

அவன் அவன் செய்ற தப்புக்கு அவன் அவன் தான் தண்டனை அனுபவிக்கணும். நான் பண்ணதுக்கு தான் இப்போ அனுபவிக்கிறேன். சாப்பிடுறது தப்புங்களா? தப்பில்ல.. ஆனா என்ன சாப்பிடுறோம், அத எங்க சாப்பிடுறோம்ங்கறது தான் முக்கியம்’ என்று கூறியுள்ளார்.

மேலும் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்வதையும் அந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார்.