உ.பி. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிரியங்கா விரைவில் ஸ்ரீபெரும்புதூர் வருகை

டில்லி:

நாடாளுமன்ற தேர்தலுக்காக உத்தரபிரதேச மாநில கிழக்கு மற்றும் மேற்கு பகுதி பொதுச்செய லாளர்களாக நியமிக்கப்பட்ட பிரியங்கா வதேரா மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் இன்று தங்களது பதவிகளை ஏற்றனர்.

உ.பி.கிழக்கு பகுதி  பொதுசெயலர் பொறுப்பை ஏற்றார் பிரியங்கா விரைவில் ஸ்ரீபெரும்புதூர் வருகை தர இருப்பதாக கூறப்படுகிறது.

உ.பி.,( கிழக்கு) காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா வதேரா, இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்த பிரியங்காவை காங்கிரஸ் தொண்டர்கள் பிரியங்கா ஜிந்தாபாத்  என்ற பெருத்த கோஷத்துடன் வரவேற்றனர்

அங்கு பதவி ஏற்றதும், தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்து  கட்சி பணிகளை தொடர்ந்து. உ.பி., கிழக்கு பகுதி காங்கிரஸ் நிர்வாகிகளிடம், சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.  இந்த நிலையில், அவர் தனது தந்தையாரின் நினைவிடம்அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் வந்து அஞ்சலி செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

தனது தந்தை ராஜீவ்காந்தியின்  நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி அவரது ஆசி  பெற்ற பின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வரும் 11ம் தேதி முதல் உ.பி.,யில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், அன்றே, ராகுலுடன் இணைந்து சாலை வழியே பேரணியாக சென்று மக்களை சந்திக்கவும், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டு உள்ளார்.

இந்த மாத இறுதியில், கட்சியின் பலத்தை காட்டும் வகையில் நடத்தப்படும் பேரணியில், ராகுலுடன் பங்கேற்கவும் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 ஜோதிராதித்யா சிந்தியா

அதுபோல உ.பி. மேற்கு பகுதிக்கான பொது செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள  ஜோதி ராதித்யா சிந்தியா, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் விநாயகர் பூஜை நடத்திய மேற்கு உத்தரப் பிரதேசத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார்.

இது தொடர்பான வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று பிரியங்கா காந்தியும், ஜோதிராதித்யா சிந்தியா உ.பி. தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.