திரைப்பட பி.ஆர்.ஓ. சங்க  தேர்தல்

தென்னிந்தியத் திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கம்  என்கிற பி.ஆர்..  யூனியனில்  தேர்தல் நடைபெற இருக்கிறது.

பி.ஆர்..க்கள் யூனியனில் 2 வருடங்களுக்கு ஒரு முறை புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அந்த வகையில் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவடைவதால் புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

R06A0301

இதில் தலைவர் பதவிக்கு நெல்லை சுந்தர்ராஜன், டைமண்ட் பாபு, ஆதம்பாக்கம் ராம்தாஸ் ஆகியோர்  போட்டியிடுகின்றனர்.

செயலாளர் பதவிக்கு பெருந்துளசி பழனிவேல், ஜான் ஆகியோர்  பேர் போட்டியிடுகின்றனர்.

பொருளாளர் பதவிக்கு விஜய் முரளி மற்றும் சுரேஷ் சந்திரா இருவரும் போட்டியிடுகின்றனர்.

2 துணைத் தலைவர்கள் பதவிக்கு பி.டி.செல்வகுமார், வி.கே.சுந்தர், கோவிந்தராஜ், கணேஷ்குமார் ஆகிய நான்கு பேர் போட்டியிடுகின்றனர்.

2 துணைச் செயலாளர்கள் பதவிக்கு ராமானுஜம், நிகில் முருகன், வெங்கட், பி.யுவராஜ் ஆகிய நால்வரும் போட்டியிடுகின்றனர்.

9 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு, மேஜர்தாசன், வெட்டுவானம் சிவக்குமார், பாலன், ஆர்.எஸ்.அந்தணன், ஆறுமுகம், செல்வரகு, இனியன் ராஜன், கிளாமர் சத்யா, மனோகரன், சக்திவேல், சரவணன், ரேகா என 12 பேர் போட்டியிடுகின்றனர்.

வரும் ஜூன் 19-ம் தேதியன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரையிலும் வாக்குப் பதிவு நடைபெறும். அன்று மாலையே ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.