செவ்வாய் கிரகத்தில் நிலத்திற்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது.

mars

பூமியை போல் செவ்வாய் கிரகத்திலும் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. செவ்வாய் கிரகத்தின் தன்மை, அதன் ஈரப்பதம் மற்றும் உயிரினங்கள் வாழ்வாதற்கு ஏற்ற சூழல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் விண்கலன்களை செலுத்தி வருகின்றது.

அந்த வகையில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக 2003ம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் எனும் விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலன் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

அதன்படி மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் அனுப்பி வைத்த புகைப்படங்களில் செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பிற்கு அடியில் நீர்பரப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதற்கான ஈரப்பதம் அந்த புகைப்படங்களில் உள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 4,000 முதல் 5,000 மீட்டர் ஆழத்தில் நீர் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் விண்கலம் வெளியிட்ட‌ புகைப்படங்களில் நிலத்தின் மேற்பரப்பில் சகதி போன்ற அமைப்பு காணப்படுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.