பிரபுதேவா படத்துக்கு சிக்கல்… கிடப்பில் கிடக்கும் பொன்.மாணிக்கவேல்..

டனக்கலைஞராக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் பிரபுதேவா.

காதலன் படத்தை ஷங்கர் ஆரம்பித்த போது-அதில் நடிக்க பிரசாந்திடம் கால்ஷீட் கேட்டார்.அந்த சமயத்தில் ‘ஜென்டில்மேன்’ வெளியாகி இருக்கவில்லை என்பதால் தயக்கம்  காட்டினார் பிரசாந்த்.

இதனால் தனது ஜென்டில்மேன் படத்தில் ‘சிக்கு புக்கு ரெயிலே’ படத்துக்கு ஆடி இருந்த பிரபுதேவாவை காதலன் படத்துக்கு ஹீரோ ஆக்கினார் – ஷங்கர்.

படம் வசூலில் வாரி குவித்தது. பின்னர் நடனத்தை ‘பார்ட் டைம்’ ஆக வைத்து கொண்டு–முழு நேர கதாநாயகனாக மாறினார், பிரபுதேவா. காதலனுக்கு பிறகு வந்த படங்கள் பெரிய அளவில் ஓடாததால் –டைரஷ்ன் பக்கம் கவனம் செலுத்தினார். சில படங்கள் ஓடின.சில படங்கள் ஓடவில்லை.

இப்போது ஏகப்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கிறார்.சம்பளம் சுமார் நான்கு கோடி ரூபாய்.

அண்மையில் வெளிவந்த இவரது ‘’சார்லி சாப்ளின்-2” வெற்றி பெறவில்லை.இதனால் பிரபுதேவா கதாநாயகனாக நடித்து வந்த   பொன்.மாணிக்கவேல் படம் ‘பைனான்ஸ்’ பிரச்சினையால் முடங்கி கிடக்கிறது. இன்னும் 10 நாள் ஷுட்டிங் மட்டுமே பாக்கி.

இது ஒரு புறம் இருக்க-

அவர் ஹீரோவாக நடித்து வந்த தேள், எங்-மங்-சங் , ஊமைவிழிகள். தேவி-2 ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் பாடல் காட்சிகள்-பாக்கி இருப்பதால் அந்த படங்களின் ரிலீசும் கேள்வி குறியாகியுள்ளது.

–பாப்பாங்குளம் பாரதி