புனேக்கு மாற்றப்பட்ட ஐபிஎல் போட்டிக்கு திடீர் சிக்கல்

புனே:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி எழுந்த எதிர்ப்பு காரணமாக சென்னையில் நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது.

 

ஆனால், அங்கும் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புனேவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.
அதனால் கிரிக்கெட் மைதானத்திற்கு எப்படி தண்ணீர் வழக்க முடியும் என மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தை மும்பை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது