நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்பவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், தீர்வுகளும்: மருத்துவர் பாலாஜி கனகசபை

ன்றைய சூழ்நிலையில் அனைவரும் நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்வது இயல்பாகிவிட்டது.

இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் சூழ்ந்த சூழ்நிலையில் உடல் உழைப்பின்றி அனைத்து வகையான வேலைகளையும் ஒரு இடத்தில் அமர்ந்து அலுவல்கள் செய்துகொண்டிருக்கிறோம். இதனால் உடல் நலக்கேடு ஏற்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் 6% இறப்பு உடல் உழைப்பிலாமல் ஓரிடத்தில் இருந்து பணி செய்வதால் ஏற்படும் நோயினால் ஏற்படுகிறது என்று கூறுகிறது.  அதில் 27% குடல் புற்று நோய், 30% இருதய நோய், மன உளைச்சல் போன்றவைகள் இருப்பதாக சுகாதார ஆய்வறிக்கைகள் கூறுகிறது.

அதிக நேரம் அமர்ந்துகொண்டே பணி செய்வதால் ஏற்படும் நோய்கள்

1.நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்)
2. அதிக உடல் எடை
3. குடல் புற்று நோய்
4. இரத்த குழாய்களில் ஏற்படும் இரத்தக்கட்டி Venous Thrombeoembolism(VTE), Deep vein Thrombosis (DVT)
5. இருதய நோய்
6.இடுப்பு மற்றும் கழுத்து எலும்பு நோய் (Sciatica, தசை இறுக்கம்)
7.அதிக கொழுப்பு
8.கண் மற்றும் விழித்திரை நோய், தலைவலி, மன அழுத்தம்
போன்றவைகள் ஓரே இடத்தில் நீண்ட நாட்கள் அமர்ந்துகொண்டு செய்தால் வரும் வாய்ப்பு மிக அதிகம்.

ஆலோசனை

1. அலுவலகத்தில் அதிக நேரம் அமரும்போது குறைந்தது 30 நிமிடத்திற்கு ஒரு முறையாவது எழுந்து உட்காரவேண்டும். கைகால்களை அசைக்கவேண்டும்.

2.போன் பேசினால் எழுந்து நடந்துகொண்டே பேசும்படி செய்யலாம்

3.அமரும் இருக்கை 90 டிகிரி 100 வரைஇடுப்புக்கு இதமாக இருக்கை இருப்பதாக இருத்தல் நன்று

4.கழுத்துக்கு பலம் சேர்க்கும் இருக்கை இருப்பது நன்று

5.கிபேர்டு, மவுஸ் உட்காரும் மட்டத்திற்கு வயிற்றின் தொப்புளுக்கு நேர் பகுதியில் இருப்பது நன்று

6.தினமும் 30 நிமிடங்கள் யோகா, மற்றும் காலை மாலை அரை மணி நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும்

7.இடுப்பு தசைகள் வலுப்பெற இடுப்புக்கென இருக்கக்கூடிய யோகாசனங்களை செய்வது நன்று

8.நீண்ட நேரத்தில் அமர்ந்து வேலை செய்வர்களுக்கு தேவையான தளர் உடைகளை அணிந்திருத்தல் நன்று

9.ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை நீர் நிச்சயம் அருந்தவேண்டும்.

10. வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது

யோகாசனங்கள்

பாலசனாம், புஜங்காசனம், தனுராசானா, ஆலாசனம், சுகாசனம், பத்மாசனம், வஜ்ராசனம், சூர்ய நமஸ்காரம் போன்ற யோக முறைகளை தினமும் 5 முறை செய்யலாம், அதோடு 30 நிமிடம் தியானம், உணவுக்கட்டுப்பாடுகள் மிகவும் அவசியம், மேற்கண்ட யோகாசனங்களை உரிய முறையில் கற்று பிறகு செய்யவும்,

தகவல்:

மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS, PhD
அரசு மருத்துவர்
கல்லாவி
9942922002

கார்ட்டூன் கேலரி