ரகளையில் ஈடுபட்ட இருவர் நீக்கம்: காங்கிரஸ் தலைவர் திருநா அதிரடி

சென்னை:

டந்த 7ம் தேதி தமிழக காங்கிரஸ் தலமை அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்ட இரு பிரமுகர்களை அக் கட்சியின் தமிழக தலைவர் நீக்கி உள்ளார்.

கடந்த 7ம் தேதி தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில், மகிளா காங்கிரஸ் கூட்டம் நடந்தது.

அப்போது பல்வேறு அணிகளைச் சேர்ந்த மகிளா காங்கிரஸ் உறுப்பினர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அன்று ரகளையில் ஈடுபட்டதாக திருவள்ளூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவர் கௌரி கோபால், கிருஷ்ணகிரி சட்டமன்ற முன்னாள் வேட்பாளர் முகம்மது சையத் கியாஸ் உல்ஹக் ஆகியோர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

இவர்களுடன் கட்சியினர் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அறிவித்துள்ளார்.