சென்னை

ந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் விருகம்பாக்கம் கிளையிள் கொள்ளை அடிக்க காவலரை சென்னக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையில் கொள்ளை நடந்தது தெரிந்ததே.   இந்தக் கொள்ளையில் சம்பந்த்தப்பட்டுள்ளதாக இந்த வங்கியின் காவலர் ஷபிலால் மீது சந்தேகம் எழுந்தது.   அவர் கொள்ளை சம்பவத்துக்குப் பின் தலைமறைவாகி விட்டதால் போலீசார் அவரை தேடி நேபாளத்துக்கு சென்றனர்.

காவல்துறையின் மற்றொரு பிரிவினர் ஷபிலால் தங்கி இருந்த வங்கியின் முதல் தளத்தை சோதனி இட்டனர்.  அங்கு ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் உலோகம் வெட்டும் நாசில்கள் கிடைத்தன.   அந்த சிலிண்டர்கள் அமைந்தகரையில் உள்ள ஒரு கடையில் இருந்து வாங்கப்பட்டது தெரிந்து அங்கு விசாரணை மேற்கொண்டனர்.   அப்போது அந்தக் கடை உரிமையாளர்  ஷபிலால் தங்கள் கடையில் இருந்து இந்த சிலிண்டர்களை வாங்கிச் சென்றதை உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் நேபாளம் சென்றுள்ள குழு நேற்று இண்டர்போல் என்னும் சர்வதேச காவல்துறையின் உதவியுடன் ஷபி லால் இருப்பிடத்தை கண்டறிந்துள்ளனர்.   அங்கு ஷபிலாலை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர்.   அவரை சென்னை கொண்டு வ்ர நேபாள அரசின் ஒப்புதலுக்காக சென்னை காவல்துரையினர் காத்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.