வருகிற 14-ம் தேதி கூடுகிறது தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு…!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம், வருகிற 14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறும் என அவசரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2015 – 2018-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், 2015-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது.அன்று மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தற்போதுள்ள நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டும் கூட நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால், தேர்தலை 6 மாதங்களுக்குத் தள்ளி வைத்தனர்.

தற்போது 6 மாத காலக்கெடுவும் முடிவடைந்துவிட்டதால், தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.