விக்ரம் நடிக்கும் சாமி2 படம் ஆகஸ்டில் வெளியிட திட்டம்

யக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி-2  படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியான நிலையில், படம் ஆகஸ்டில் வெளியாகும் என்று தெரிகிறது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் படம் சாமி2, சாமி ஸ்கொயர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ், வில்லனாக பாபி சிம்ஹா உள்பட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நிறைவடைந்த நிலையில் இதனை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே மி படம் வெளியாகி 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சாமி இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது.

இந்த படத்தில் விக்ரம் பேசும் வசனமான, நான் தாய் வயத்தில பொறக்கல… பேய் வயத்தில பொறந்தேன். நான் சாமி இல்ல… பூதம் என்ற வசனங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் படத்தை வெளியாவை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.