பிரபல மலையாள பட தயாரிப்பாளர் காலமானார்..

லையாளத்தில் சுயம்வரம் மற்றும் கொடி யேட்டம் ஆகிய படங்களை தயாரித்தவர் குளத்தூர் பாஸ்கரன் நாயர். இப்படங்களை அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். மாநில அளவிலும் தேசிய அளவிலும் இப்படங்கள் பல விருதுகளை வென்றுள்ளது.


கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் குளத்தூர் பாஸ்கரன் நாயர் வசித்து வந்தார். நேற்று அவர் காலமானார். அவருக்கு வயது 83. வயது முதிர்வு காரணமான ஏற்பட்ட உடல் நலிவால் அவர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு  மலையாள திரையுல கினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக காதிபோர்டில் பணியாற்றி வந்த பாஸ்கரன் நாயர்  பின்னர் அடூர்கோபாலகிருஷ்ணனுடன் இணைந்து இவர் தங்களது கனவு படங்களை உருவாகுவதில் ஆர்வம் காட்டினார்.