தயாரிப்பாளர் நந்தகோபால் வழங்கிய கெடு இன்றுடன் முடிகிறது: என்ன செய்யப்போகிறது நடிகர் சங்கம்?

யாரிப்பாளர் நந்தகோபால் அளித்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில் நடிகர் சங்கம் என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

விசால் நடித்த கத்திச்சண்டை, விஜய் சேதுபதி நடித்த 96, விக்ரம் பிரப பு நடித்த வீரசிவாஜி உட்பட பலபடங்களைத் தயாரித்தவர் “மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்” நிறுவன உரிமையாளர், எஸ்.நந்தகோபால்.

மேற்கண்ட மூன்று படங்கள் வெளியீட்டின்போதும் சில சிக்கல்கள் ஏற்பட்டன. இந்த நிலையில் குறிப்பிட்ட நடிகர்கள் தங்களது சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்ததாகவும், ஆனால் அந்தத் தொகையை நந்தகோபால் இன்னும் தரவில்லை என்றும் நடிகர் சங்கம் புகார் கூறியது. மேலும் இனி   நந்தகோபாலின் “ மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்” நிறுவனத்துக்கு நடிகர்கள் எவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என்றும் நடிகர் சங்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

விசால் – நாசர் – கார்த்தி

இது குறித்து தனது தரப்பை விளக்க,  எஸ்.நந்தகோபால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது  அவர், “ விஷால் நடித்த கத்திசண்டை படத்திற்கு படம் வெளியிடுவதற்கு முன்பே அவருக்கு பணம் செட்டில் செய்யப்பட்டு விட்டது. 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு முழு ஊதியத்தையும் வழங்கிவிட்டேன். இதுவரை  நான் தயாரித்த அனைத்து திரைப்படங்களிலும் தனது மனசாட்சிக்குட்பட்டு செயல்பட்டு வருகிறேன்” என்றார்.

மேலும், “இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் கையெழுத்தில்லாமல் மொட்டைக் கடுதாசி ஒன்றை வெளியிட்டிருப்பதாக கேள்விப்பட்டேன்.   தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அறிக்கையை அனுப்பினார்களா அல்லது ஒரு சிலர் வேண்டுமென்றே அனுப்பியிருக்கிறார்களா  என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இப்பிரச்சனையில் நடிகர் சங்கத்துடன் தயாரிப்பாளர் சங்கம் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். தயாரிப்பாளர் சங்கம் கூறுவதை முழுமையாக ஏற்பேன். வரும் திங்கட் கிழமைக்குள் இந்த பிரச்சினையை பேசித்தீர்க்க வேண்டும். இல்லையென்றால் , அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குவேன்.  அதாவது, டைரக்டர் ஜென்ரல் ஆப் காம்படிசன் கமிசனில் (  ‘Director General of, Competition Commission of India’) புகார் செய்வேன்” என்றார்.

அவர் விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது.  தான் கூறியபடி டைரக்டர் ஜென்ரல் ஆப் காம்படிசன் கமிசனில் நடிகர் சங்கம் குறித்து புகார் அளித்தால் விவகாரம் பெரிதாகும்.

இந்த டைரக்டர் ஜென்ரல் ஆப் காம்படிசன் கமிசன் என்பது, யாரையாவது தொழில் செய்ய விடாமல் எவராவது அல்லது எந்த அமைப்பாவது தடுத்தால் இங்கு புகார் செய்யலாம்.

நந்தகோபால்

ஏற்கெனவே விஸ்வரூபம் படத்தின்போது திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரணியனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இது போல தடை விதிப்பதாக கூறப்பட்டது. அப்போது அவர் இந்த டைரக்டர் ஜென்ரல் ஆப் காம்படிசன் கமிசனில் புகார் அளித்தார். இந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், குறிப்பிட்ட அறக்கையை தங்கள் சங்கம் வெளியிட வில்லை என்றது. பிறகு அந்த லெட்டர் பேடே தங்களுடையது இல்லை என்றது. இந்த விவகாரம் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ஆகவே நடிகர் சங்கத்தை எதிர்த்து  தயாரிப்பாளர் நந்தகோபால் டைரக்டர் ஜென்ரல் ஆப் காம்படிசன் கமிசனில் புகார் அளித்தார் விவகாரம் பெரிதாகும்.

அதே நேரம், “இப்படி விவகாரம் ஆகலாம் என்பதை எதிர்பார்த்துத்தான், தங்களது கையெழுத்தே இல்லாமல் அந்த அறிக்கையை நடிகர் சங்கம் வெளியிட்டுள்ளது” என்றும் சொல்லப்படுகிறது.