இயக்குநராக அறிமுகமாகிறார் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்….!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

ரவீந்தர் சந்திரசேகரன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று (டிசம்பர் 25) நடைபெற்றது. ‘மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்’ எனப் பெயரிட்டுள்ள இந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவாளருக்கான தேர்வும் நடைபெற்று வருகிறது.

சரவண ப்ரியன் மற்றும் சிவ துரை இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ப்ரியா மாலி, ஆடை வடிவமைப்பாளாராக ஹினா, எடிட்டராக நிர்மல், கலை இயக்குநராக நர்மதா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.