சினிமாவிலிருந்து அரசியலுக்குச் செல்லும் நடிகர்களைச் சாடியுள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி….!

சினிமாவிலிருந்து அரசியலுக்குச் செல்லும் நடிகர்களைச் சாடியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

நேற்று (அக்டோபர் 12) காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பாஜகவில் இணைந்தார் குஷ்பு.

பலரும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போது அவர் ட்வீட் செய்தது, பேசியது என அனைத்தையும் எடுத்துப் பகிர்ந்து சாடியிருந்தார்கள்.

அதன் தொடர்ச்சியாக சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில் :-

“சினிமாவிற்கு நடிக்க வருகிறார்கள். சினிமா அவர்களை வாழ வைக்கிறது. ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு மக்களைக் காக்கப் போகிறோம் எனப் புறப்பட்டுவிடுகிறார்கள். முதலில் உங்களை வாழவைத்த சினிமாவிற்கு ஏதாவது நல்லது பண்ணுங்க. அதையே செய்ய முடியாத நீங்கள்லாம்… மக்களுக்கு என்னத்த பண்ணப் போறீங்க?” என பதிவிட்டுள்ளார் .