தமிழ்த் திரையுலகில் முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லட்சுமி மூவி மேக்கர்ஸ். கே.முரளிதரன், வி.சுவாமிநாதன் மற்றும் ஜி.வேணுகோபால் மூவரும் இணைந்து இந்தத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

‘கோகுலத்தில் சீதை’, ‘ப்ரியமுடன்’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘உன்னைத் தேடி’, ‘பகவதி’, ‘அன்பே சிவம்’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதனுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 10) காலமானார். தமிழ்த் திரையுலகில் நிகழும் முதல் கொரோனா மரணம் இதுவாகும்.

சுவாமிநாதனின் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்து வருகிறார்கள்.