அன்புச் செழியன் மீது தொடரும் தயாரிப்பாளார்களின்  புகார்கள்

ஞானவேல் ராஜாவும் அன்புவும் திரைப்பிரமுகர்களும்

சென்னை

ஞானவேல் ராஜா மற்றும் பல தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

பிரபல நடிகர் சசிகுமாரின் நெருங்கிய உறவினர் அசோக் குமார் தற்கொலை செய்துக் கொண்டதும்  அவர் ஃபைனான்சியர் அன்புச் செழியனிடம் கடன் வாங்கி அவர் பணம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்துக் கொண்டதாக தனது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிடிருந்ததும் தெரிந்ததே.    இதைத் தொடர்ந்து இயக்குனர்கள் அமீர், சுசீந்திரன் மற்றும் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் அன்பு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நடிகர் சசிகுமார் அன்பு மீது வளரசவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.   தலைவறைவான அன்புச் செழியனை பல மாநிலங்களிலும் போலீசார் தேடி வருகின்றனர்.    அதே நேரத்தில் அன்புவுக்கு ஆதரவாக சுந்தர் சி, விஜய் ஆண்டனி, மனோபாலா, தேவயானி போன்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதலில் ஆதரவாகக் குரல் கொடுத்த சீனு ராமசாமி தற்போது தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.   திரைப்பட தயாரிப்பாளர்கள்,  ஞானவேல் ராஜா, சிவி குமார் போன்ற மேலும் சில தயாரிப்பாளர்களும் வளசரவாக்கம் போலீசிடம் புகார் அளித்துள்ளனர்.  சசிகுமாரிடம் வளரசவாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்>