தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அட்டவணையை ரத்து செய்து அறிக்கை வெளியீடு….!

--

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்துவதற்கான காலக்கெடுவை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து மே 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர்‌ எம்‌.ஜெய்சந்திரன்‌ அவர்களின்‌ தலைமையில்‌ தேர்தல்‌ நடத்தி முடிக்க வேண்டும்‌ என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்‌.

இதனால் ஏப்ரல்‌ 17-ம்‌ தேதி அறிவித்திருந்த தேர்தல்‌ அட்டவணை ரத்து செய்யப்பட்டுள்ளது . புதிய தேர்தல்‌ அட்டவணை உறுப்பினர்களுக்கு கடிதம்/whatsapp மூலம்‌ பின்னர்‌ அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர் .

குறிப்பு:

1. உறுப்பினர்கள்‌ தங்களது சந்தாத்‌ தொகையினை 15.06.2020 அன்று மாலை 6-மணிக்குள்‌ செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. 15.6.2020 அன்றே கடைசி நாள்‌ என்பதை இதன்‌ மூலம்‌ தெரிவிக்கப்படுகிறது.

2.வாக்காளர்‌ பட்டியல்‌ தொடர்பாகக் குறைகளை சமர்ப்பிக்க 15.06.2020 வரை கால அவகாசம்‌ நீடிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள்‌ தங்களது குறைகளை கடிதம்‌ அல்லது (tfpcouncil@yahoo.co.in) என்ற மின்னஞ்சல்‌ மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்‌ என்றும்‌, அதனை வரும்‌ 15.06.2020 அன்று மாலை 6 மணிக்குள்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌ என்பதை இதன்‌ மூலம்‌ தெரிவிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட இறுதி தேதிகள்‌ எந்த காரணத்தினை கொண்டும்‌ மீண்டும்‌ நீடிக்கப்படமாட்டாது என அறிவித்துள்ளனர் .