‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி’ பெயர் பட்டியல் வெளியீடு….!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது முதல் ஆளாக டி.சிவா தலைமையிலான அணி தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி’ என்று டி.சிவாவின் அணிக்குப் பெயரிட்டுள்ளனர். இதில் தலைவராக டி.சிவா, பொருளாளராக முரளிதரன், செயலாளர்களாக தேனப்பன், ஜே.சதீஷ் குமார், துணைத் தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், தனஞ்ஜெயன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இந்த அணியின் சார்பில் செயற்குழு உறுப்பினர்களாக கே.ராஜன், ராதாரவி, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், சித்ரா லட்சுமணன், ஹெச்.முரளி, எஸ்.எஸ்.துரைராஜ், கே.விஜயகுமார், ஆர்.வி.உதயகுமார், மனோஜ் குமார், நந்தகோபால், மனோபாலா, பாபு கணேஷ், சுப்பு பஞ்சு, முருகராஜ், வினோத் குமார், ரங்கநாதன், பஞ்ச் பரத், மதுரை செல்வம் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.