ஜூன் 30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத்திற்குத் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

டி.சிவா தலைமையில் ஒரு அணியும், முரளி தலைமையில் ஒரு அணியும் களத்தில் உள்ளன.

ஜே.சதீஷ் குமார் தேர்தல் அதிகாரிக்குக் கடிதமொன்றை எழுதியிருக்கிறார்.

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கி பல நாடுகளில் பல நபர்களுக்குப் பெரிதும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. நேற்றைய தினம் பிரதமர் 60-வயது கடந்த நபர்கள் யாரும் 2 வார காலத்திற்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தங்களது சந்தாத் தொகையினை இந்த மாதம் 31-ம் தேதிக்குள் கட்ட வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் சரிபார்த்து ஏதேனும் குறை இருப்பின் அந்தக் குறைகளை இந்த மாதம் 24-ம் தேதிக்குள் கடிதமாக அளிக்க வேண்டும் என்றும் தாங்கள் ஏற்கெனவே கூறியுள்ளீர்கள். எங்களது சங்க உறுப்பினர்களில் பல பேர் 60 வயதைக் கடந்த மூத்த உறுப்பினர்களாக உள்ளார்கள்.

அவர்களால் தற்போது சங்கத்திற்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு கரோனா அச்சுறுத்தல் முழுவதும் நீங்கிய பிறகு தாங்கள் மேற்கூறியவற்றைப் பரிசீலனை செய்து வேறு ஒரு புதிய தேதி அறிவித்து எங்களது சங்கத்தின் தேர்தல் வேலைகளைத் தொடங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்”.என எழுதியுள்ளார் .