தயாரிப்பாளர் சங்கம் இன்று  திரையரங்கு அதிபர்களை தனித் தனியே சந்திக்கிறது

திரையரங்குகளின் பார்க்கிங் கட்டனம்,   உணவுப் பொருகளை அதிக விலைக்கு விற்பது, முன் பதிவு கட்டணம் உள்ளிட்ட பலவற்றை எதிர்த்து தயாரிப்பாளர்கள்  சங்கம் வேலை நிறுத்தம் செய்து வருகிறது.    அத்துடன் டிஜிட்டல் ஒளிபரப்பான குயூப் நிறுவனத்தின் கட்டணத்தை குறைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வேலை நிறுத்தம் செய்து வருகிறது.   இதனால் இதுவரை திரையுலகுக்கு ரூ. 400 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திரையரங்கு அதிபர்கள் சங்கம் இது வரை கியூப் நிறுவனத்துடன் பல சுற்று பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர்.   அப்படி இருந்தும் இன்னும் எந்த ஒரு முடிவும் எட்டவில்லை.   இன்று தயாரிப்பாளர்கள் சங்கம் திரையரங்கு உரிமையாளர்களுடன் தனித் தனியே சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறது.   தயாரிப்பாளர்கள் சங்கம் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் திரையரங்கு உரிமையாளர்களை நேரடியாக சந்தித்து விவாதிக்க திட்டம் இட்டுள்ளது.  அதற்காக இன்று (வியாழன்) மாலை 6 மணிக்கு சென்னை தி நகரில் அமைந்துள்ள ஆந்திரா கிளப்பில் ஒரு கூட்டத்துக்கு சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.   அந்தைத்து திரையரங்கு உரிமையாளர்களையும் இந்த முக்கியமான கூட்டத்தில் கலந்துக் கொள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அழைக்கிறாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Producer's council is meeting theatre owners today
-=-