சிம்புவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி புகார்….!

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் ‘மாநாடு’. தொடக்கத்திலிருந்தே பல இடையூறுகளை சந்தித்து வந்தது .

இதனிடயே வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வேண்டும், மாதத்தில் 15 நாட்களில் படப்பிடிப்பு என பல்வேறு கண்டிஷன்களைச் சிம்பு வைப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிம்பு நடிக்கவிருந்த ‘மாநாடு’ படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை.’மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கம் என அறிவித்தார் .

ஏற்கனவே நர்தன் இயக்கத்தில், சிம்பு ஒரு படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு சிம்பு சரியாக வருவதில்லை என்று கூறப்பட்டது.

இதனிடையே தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுடன் சிம்புவுக்கு ஏற்கனேவே ஒரு பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில் சிம்புவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டு உள்ளதாகவும், இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: MICHAEL ROYAPPAN, producer council, Simbu, STR, suresh kamatchi, VENKAT PRABU
-=-