’’இந்தியன் 2’’ படத்துக்கு புதிய சிக்கல் :  பட்ஜெட்டை குறைக்க பட நிறுவனம் வலியுறுத்தல்..
கமலஹாசனை கதாநாயகனாக வைத்து ‘’இந்தியன் -2 ’‘படத்தை ஷங்கர்  தொடங்கிய நாளில் இருந்தே பிரச்சினை தான்.
படப்பிடிப்புக்குக் கிளம்பும் நேரத்தில் பட்ஜெட்டை  குறைக்க வலியுறுத்தியது, படநிறுவனம்.
ஆரம்பத்தில் ’’இந்தியன் -2 ‘’ படத்தின் பட்ஜெட்- 400 கோடி ரூபாய்.
இந்த பட்ஜெட்டை அரைகுறை ,மனதுடன். 220 கோடி ரூபாயாகக் குறைத்தார், ஷங்கர்.   அதன் பிறகே ஷுட்டிங் ஆரம்பமானது.
சென்னையில்; நடந்த படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு ஷுட்டிங் தடைப்பட்டது.
மீண்டும் படக்கருவியைக் கையில் எடுத்தபோது, குறுக்கே வந்து நின்றது கொரோனா.
இடைவேளை வரை படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது.ஷுட்டிங் விதிகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டால், உடனடியாக படப்பிடிப்பை மீண்டும் தொடங்கலாம் என நினைத்திருந்த ஷங்கருக்கு, பட நிறுவனம் பேரதிர்ச்சியை  அளித்துள்ளது.
பட்ஜெட்டை மேலும் குறைக்க வேண்டும் எனப் பட நிறுவனம் நிபந்தனை விதித்துள்ளதால், ஷங்கர்  ‘அப்செட்’.
இதற்கு மேலும் பட்ஜெட்டை குறைக்க அவர் தயாராக இல்லை.
இதனால் கோபம் அடைந்துள்ள ஷங்கர்’ அண்மையில் பட நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
‘’படத்தை மீண்டும் தொடங்கும் திட்டம் உள்ளதா? இப்போது ஷுட்டிங்  ஆரம்பிக்கும் உத்தேசம் இல்லையென்றால் , என்னை அடுத்த படத்துக்குச் செல்ல அனுமதியுங்கள் ‘’ என அந்த கடிதத்தில் ஷங்கர்  வலியுறுத்தியுள்ளார்.
சிக்கல் தீருமா என்பது தெரியவில்லை.
-பா.பாரதி.